தளபதி பேனரையா கிழிக்கிறீங்க..? ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..!


தளபதி விஜய்யின் சர்கார் படத்தின் ரிலீசுக்கு பிறகு அரசு தரப்பில் இருந்து அதிகம் அழுத்தம் கொடுக்கப்பட்டது. தியேட்டருக்கு வெளியில் போராட்டம் நடத்திய அதிமுகவினர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தனர்.

மேலும் அந்த பேனர்களை சிலர் கோபத்துடன் எடுத்து கீழே போட்டு விஜய் புகைப்படத்தை செருப்பால் மிதித்ததையும் பார்த்தோம்.

இந்நிலையில் அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு கிழித்து எறிந்த பேனர்களையும் விஜய் ரசிகர்கள் வீணாகாமல் நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தியுள்ளனர்.

அந்த பேனர்களை ரோட்டோரம் கடை வைத்திருப்பவர்களுக்கு கொடுத்துள்ளனர். அது அவர்களுக்கு வெயில், மழை பெய்யும் நேரத்தில் உபயோகப்படும்.-source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!