ஜெய் ஸ்ரீ சீரடி சாய் பாபா என்ற நாமத்தினால் நடந்த அற்புதங்கள்..!

bavba
யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக ஞாபகத்தில் வைக்கிறேன். எனக்கு வண்டியோ குதிரையோ ஆகாய விமானமோ ரயில்வண்டியோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே தோன்றுகிறேன் – ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

ஒருமுறை பாபாவின் அடியவர்களான காகா தீஷித் மற்றும் ஷந்தரம் இருவரும் அரசாங்கத்திற்கு வேலைகள் முடிக்க வேண்டி இருந்தது. அதனால் இருவரும் அடர்ந்த காட்டில் குதிரை வண்டியில் பயணம் செய்ய வேண்டியிருந்தது . அவர்கள் ரன்ஷெட் என்ற ஊரை கடந்து செல்லும்போது, குதிரைகள் அமைதியற்ற நிலையில் ஓடியது. அது ஒரு ஆபத்தான சூழ்நிலையாக இருந்தது. வண்டி நிலைத்தடுமாறி குலுங்கியது. ஒரு பக்கத்தில் ஆழமான பள்ளத்தாக்கும், மற்றொருபுறம் மலைகளும் இருந்தன. நிலைதடுமாறிய வண்டி மெல்ல பள்ளத்தாக்கு பாதையை நோக்கி சரிய தொடங்கியது.


காகா தீஷித் மற்றும் ஷந்தரம் இருவரும், தங்கள் இருக்கும் நிலையை அறிந்து கொண்டனர். அப்பொழுது ஷந்தரம் எதையோ பார்த்து, தீஷித்திடம் சுட்டிக்காட்டினார். தீஷித் திரும்பி பார்த்தபோது, மலைப்பகுதியில் ஒரு பெரிய புலி ஒன்று இவர்களை நோக்கி கொடுரமான கண்களுடன் பார்த்து கொண்டு இருந்தது. அந்த திகிலூட்டும் சூழ்நிலையில், அங்கு இருந்து தப்பிக்க ஒரே வழி அதற்குள் தங்கள் கைகளால் வண்டியின் சக்கரத்தை மெதுவாக திருப்பி சரியான பாதையில் வைப்பது தான். குதிரைகள் பயந்து, பின்நோக்கி நகர்ந்து.

தீடீரென அப்போது புலி மலைப்பகுதியில் இருந்து குதித்து இவர்களை நோக்கி உணவுக்காக வரத் தொடங்கியது. ஷந்தரம் தைரியமானவர், அவர் மெல்ல வண்டியின் சக்கரங்களை திருப்பி, தீஷித்திடம் சமிக்கை தந்து குதிரைகளை கையாள சொன்னார். தீஷித்க்கு பயத்தில் தொண்டை வரண்டது, என்ன செய்வது என்று தெரியாத நிலையில் அச்சத்துடன் இருந்தார். அவருக்கு அப்போது பாபாவின் நினைவு வந்தது.


உடனே ஓரு வித தைரியம் ஏற்பட்டு, “ஜெய் ஸ்ரீ சாய் பாபா, ஓடு” என்று கத்தினார். அவருடன் சேர்ந்து ஷந்தரமும் கத்தினார். அந்த சொற்களை கேட்டு புலி கோழைத்தனமாக பதுங்கி, வேறு பக்கமாக பயந்த பூனைப்போல ஓடியது. குதிரைகளும் சரியான பாதையில் வேகமாக ஓட தொடங்கின… பின்னர் இருவரும் காடுகளை பாதுகாப்பாக கடந்து சென்றனர்.

பின்னர் பாபாவின் சொற்களை நினைத்து தீஷித் கண் கலங்கினார், பாபா கூறினார் “காகா, நீ ஏன் பயப்புடுகிறாய்? உன்னுடைய பொறுப்புகள் எல்லாம் என்னுடையவை. பயத்திற்கோ, கவலைக்கோ எப்பவும் இடம் கொடுக்காதே” என்றார். அந்த நாள் அவர்கள் மனதில் மறக்கமுடியாத அளவிற்கு ஆழமாக பதிந்தது. எந்த காயமும் இன்றி தங்களை சாவின் பிடியில் இருந்து காப்பாற்றியது ” ஜெய் ஸ்ரீ சாய் பாபா “என்ற அவரின் நாமம் தான்.

சாய் பாபா என்ற நாமத்திற்கு தான் எத்தகைய சக்தி உள்ளது

ஜெய் சாய் ராம்- source : newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!