அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிரடி மாற்றம்..!!


அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி இன்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.82 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி 177.32 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்மைக்காலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இன்று ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.source-virakesari

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!