வீட்டிற்குள் நுழைந்த பாம்பை வெறித்தனமாக தாக்கிய பூனை – வைரல் வீடியோ..!

வியட்னாமில் யென் பய் மாகாணத்தில் உள்ள சாலையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலான விஷப் பாம்பு ஒன்று அங்கிருந்த பூனையின் இருப்பிடத்துக்குள் நுழைய பார்த்தது. இதை பார்த்து உஷாரான பூனை பாம்புடன் சண்டை போட்டது.

பாம்பால் எவ்வளவு முயன்றும் பூனையின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இறந்த மாதிரி பாம்பு நடித்தது. ஆனாலும் அதை விடாமல் தாக்கியது பூனை. இறுதிவரை அந்த பாம்பினால் பூனையின் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. இது சம்மந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!