இயக்குநர் பாக்கியராஜைத் தேடிவரும் ஹாலிவுட் டைரக்டர் கிறிஸ்டபர் நோலன்..!


டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்றொரு சில்வர் ஜூப்ளி கொடுத்தபோது புகழின் உச்சியில் எவ்வளவு உயரத்தில் இருந்தாரோ, இன்று அதைவிட ஒரு அடி இன்னும் உயரத்தில் இருக்கிறார் இயக்குநர் கே.பாக்கியராஜ். காரணம் சகல மகாஜனங்களும் அறிந்ததுதான்.

பொதுவாக, இப்படிப்பட்ட பஞ்சாயத்துகளில் சினிமா சங்கங்கள் மூலமோ கோர்ட்களிலோ உதவி இயக்குநர்கள் போன்ற எளியவர்களுக்கு நியாயம் கிடைப்பதே இல்லை. ஏ.ஆர்.முருகதாஸ் என்ற மெகா டைரக்டர், விஜய் என்ற உச்ச நடிகர், சன் பிக்சர்ஸ் என்ற ராட்சச நிறுவனம் போன்றவற்றை மீறி ஊர் பேர் தெரியாத உதவி இயக்குநருக்கு சாதகமாக ஒரு முடிவு கிடைத்திருப்பதற்கு பாக்கியராஜ் என்கிற சமரசம் செய்துகொள்ளாத கலைஞனே காரணம்.


இதற்காக வலைதளங்களில் பாக்கியராஜுக்கு பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில், சில குசும்பர்கள், முருகதாசின் ‘கஜினி’ படத்தை ‘மெமண்டோ’ என்ற பெயரில் காப்பி அடித்த ஹாலிவுட் டைரக்டர் கிரிஸ்டபர் நோலனின் பெயரில் ட்விட்டர் கணக்கு துவங்கி ‘யூ ஹாவ் டன் எ கிரேட் ஜாப்’ என்று அவர் வாழ்த்துவதாக ட்விட்டி வருகிறார்கள்.

இன்னொரு குரூப், முருகதாஸிடம் தனக்கு கிடைக்காத நீதியை வருண் ராஜேந்திரனுக்கு வாங்கிக் கொடுத்ததற்காக கிறிஸ்டோபர் நோலன் பாக்கியராஜைப் பாராட்ட சென்னைக்கு கிளம்பி வந்துகொண்டிருப்பதாக கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.-Source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!