இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது – வாழ்த்தும் பிரபலங்கள்..!


இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தி இருக்கும் சானியா மிர்சா இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். சாதனை நாயகியான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சர்ச்சைக்குரிய முறையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.
Sponsored by Revcontent

Md: Do This Immediately if You Have Diabetes (Watch)
Healthier Patriot
Take 1 Cup of This (Before Bedtime), Watch Your Body Fat Melt Like Crazy
Healthier Patriot

Excited to announce: Its a boy, and my girl is doing great and keeping strong as usual #Alhumdulilah. Thank you for the wishes and Duas, we are humbled ?? #BabyMirzaMalik ??

— Shoaib Malik ?? (@realshoaibmalik) October 30, 2018
31 வயதான சானியா மிர்சா தான் கர்ப்பமுற்று இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் தகவல் வெளியிட்டார். இந்த நிலையில், சானியா மிர்சா- சோயிப் மாலிக் ஜோடிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. சோயிப் மாலிக் டுவிட்டரில் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். சானியா மிர்சா- சோயிப் மாலிக்கிற்கு டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்களும் டுவிட்டர், இண்ஸ்டாகிராம் ஆகியவை வாயிலாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!