மாவீரர்களை நினைவுகூர்ந்தவர்கள் குற்றவாளிகளாம் – ருவான் விஜேவர்த்தன…!


தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது அதன் கடந்த காலத் தலைவர்களையோ, வடக்கில் நினைவு கூர்ந்தவர்கள் யாராயினும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

மவரமண்டிய என்ற இடத்தில் நடந்த நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் கூறினார். “தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக இருந்தவர் பிரபாகரன்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து உயிரிழந்த அவரது உதவியாளர்களும் கூட தீவிரவாதிகள் தான். மோசமாக பயங்கரவாத அமைப்பு என்று விடுதலைப் புலிகளை பல நாடுகளும் கூட தடை செய்திருக்கின்றன.

அத்தகையதொரு அமைப்பை ஆதரிப்பது அல்லது அதன் தலைவர்களையோ, உறுப்பினர்களையோ நினைவு கூருவது இந்த நாட்டின் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளையும், அதன் தலைவர்களையும் சிலர் வடக்கில் நினைவுகூர்ந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதற்குப் பொறுப்பான நபர்களை அடையாளம் காணும் காவல்துறை விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தவறு செய்த குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!