இவர்கள் இருந்திருந்தால் போதும் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் – விராட் கோலி


இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட வந்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இதில் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. தற்போது நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி பரபரப்பான இறுதி கட்டத்தில் டிராவில் முடிந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் ஆடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்தது. பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து திணறியது.

முதல் இரண்டு போட்டிகளில் சதம் அடித்த விராட் கோலி இப்போட்டியிலும் ஹாட்ரிக் சதம் அடித்து விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்தார். இருப்பினும் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ரன் எடுப்பதை கட்டுப்படுத்த தவறவிட்டனர். அதே சமயம் பேட்ஸ்மேன்கள் பொறுப்பு உணர்ந்து விளையாடி இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர் வீரர்கள் இருந்திருந்தால் பவுலர்கள் சொதப்பும் போது அவர்களின் ஓவரை குறைத்து ஜாதவ் அல்லது ஹர்திக்கை பயன்படுத்தி இருக்கலாம் எனவும், அடுத்து வரும் நான்காவது போட்டியில் கேதார் ஜாதவ் விளையாடுவர் எனவும் தெரிவித்தார்.source-netrigun

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!