மீடூ ஹாஷ்டேக்.. அர்ஜுன்- சுருதி ஹரிகரன் சர்ச்சை விவகாரம்..!!


சமீபத்தில் நடிகைகள் மற்றும் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை ட்விட்டர்பக்கத்தில் வெளியிட்டு மீ டூ என்ற ஹாஷ்டேக் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நிபுணன் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுன் மீது பாலியல் குற்றசாட்டை அளித்தார்.

அதில் நிபுணன் படப்பிடிப்பில் அர்ஜுன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார் தெரிவித்திருந்தார், இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும் “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. சுருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்றும் கூறியிருந்தார்.

அர்ஜுன் மீது பாலியல் புகார் அளித்த, ஸ்ருதி ஹரிஹரனிடம் விசாரணை நடத்த, கன்னட திரைப்பட வர்த்தக கவுன்சில் கூட்டம் பெங்களூரில் சில நாட்கள் முன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அர்ஜுனையும் அழைத்து சமாதானம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், ஸ்ருதி ஹரிஹரன் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கோரி கடிதம் தந்தால் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை அவமதிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை சுருதி ஹரிகரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கும் தொடுத்தார்.

இந்த புகாரைத் தொடர்ந்து அர்ஜூன் மீது 354A (பாலியல் தொல்லை) மற்றும் 354 என்று ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அர்ஜூன் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.source-seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!