மீடூவை அலற வைத்த பிக்பாஸ் வைஷ்ணவி… லெஸ்பியன் பொண்ணுங்களுமா..?


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான வைஷ்ணவியை ஓரின சேர்க்கை பெண் ஒருவர் உடலுறவுக்கு அழைத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட்டை தொடர்ந்து இந்திய சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரம் தற்போது தமிழ் திரையுலகிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான வைஷ்ணவி, ஓரின சேர்க்கை பெண் ஒருவர் தன்னை உடலுறவுக்கு அழைத்ததாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

பிரபலங்கள் மீது மீ டூ தளத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஓரின சேர்க்கை பெண் மீது வைஷ்ணவி மீ டூ புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-
Source: punnagai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!