பெண்களுக்கு சபரிமலையில் தடை – இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்…!


சபரிமலையில் பெண்களுக்கு வரும் மாதவிடாய் குறித்து காரணம் சொல்லி, பலர் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், பெண்களின் மாதவிடாய் சிறப்பை கூறும் கோவிலும் இந்தியாவில் உள்ளது. அதிலும் இந்த கோவிலின் சிறப்பு என்னெவென்றால், ஒவ்வொரு மனித உயிரும் பிறந்து வரும் தாயின் யோனியை பூசிப்பதே இதுவாகும். உலகின் ஒரே கோவில் இதுமட்டும்தான் என்கிறார்கள் பக்தர்கள்.

குவஹாத்தி நகரத்திற்கு விஜயம் செய்பவர்கள் காமாக்யா கோயிலை தரிசிக்காமல் திரும்பினால் இந்த சுற்றுலாப்பயணம் பூர்த்தியடையாது என்றே சொல்லலாம். ஹிந்து ஆன்மீக கலாச்சாரத்தின்படி 51 சக்திபீடங்களில் ஒன்றாக இந்த கோயில் கருதப்படுகிறது. நகர மையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த நீலாச்சல் மலை உச்சியில் இந்த கோயில் வீற்றுள்ளது. சரி வாருங்கள் இன்னும் பல அதிசயங்களைத் தெரிந்துகொள்வோம்.

தனித்தனி கோயில்கள்
10 மஹாவித்யாக்களுக்கான தனித்தனி கோயில்கள் இங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. திரிபுரசுந்தரி, மாதங்கி மற்றும் கமலா ஆகிய தெய்வங்களின் சிலைகள் கோயிலின் பிரதான கருவறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சிறு கோயில்கள்
மற்ற ஏழு அவதாரங்களின் சிலைகள் பிரதான கோயிலை சுற்றியுள்ள சிறு கோயில்களில் பிரதிஷ்டைசெய்யப்பட்டிருக்கின்றன. அம்புபச்சி மேளா எனும் திருவிழா இந்த காமாக்யா கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மாதவிலக்கு நாளில் திருவிழா
காமாக்யா தேவியின் வருடாந்திர மாதவிலக்கு நாளில் இந்த திருவிழா கொண்டாடப்படுவதாக ஐதீகமாக சொல்லப்படுகிறது. நாடெங்கிலும் இருந்து தந்திரிக் யோகிகள் இந்த திருவிழாவின்போது அதிகம் விஜயம் செய்கின்றனர்.


துர்க்கா பூசை
துர்க்கா பூசை மற்றும் மானஷா பூசை ஆகிய திருவிழாக்களும் இந்த கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

ஒன்லி பார் ஹின்டுஸ்
ஹிந்துக்கள் மட்டுமே இந்த காமாக்யா கோயிலில் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவலாகும்.

வேறு பெயர்கள்
காமாக்யா தேவியை திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என பல பெயர் கொண்டு புராண கதைகளில் அழைக்கப்படுகிறார்.

கட்டிடம்
ஏறத்தாழ பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் இது. காமாக்யா கோவில் 11 நூற்றாண்டில், ஓர் போரில் உண்மையான காமாக்யா கோவில் அழிக்கப்பட்டது என்றும் பிறகு 16ம் நூற்றாண்டில் பீகாரின் அரசர் நர நாராயணா என்பவர் மீண்டும் புதிப்பித்து கட்டினார் என்றும் கூறப்படுகிறது.

எங்குள்ளது
51 சக்திபீடங்களில் ஒன்றாக இந்த கோயில் கருதப்படுகிறது. நகர மையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த நீலாச்சல் மலை உச்சியில் இந்த கோயில் வீற்றுள்ளது.

நரபலிகள்
இந்த கோவிலில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்பு வரை நரபலிகள் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.-Source: nativeplanet

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!