தலையில் முடி உதிர்ந்த இடத்தில் அடர்த்தியாக வளர இத பண்ணுங்க…!


கோடைக்காலம் வந்து விட்டாலே நமது வாழ்க்கை முறையிலும் பல மாறுதல்கள் ஏற்படத் தான் செய்கின்றது. உடல் ஆரோக்கியத்திற்கு சில சவால்கள் ஏற்படுவது ப்ப்லவே முடியின் ஆரோக்கியத்திற்கும் பல சவால்கள் ஏற்படத் தான் செய்கின்றன.

அதிகளவான மாசுக்களினாலும், சூரிய வெப்பம் அதிகரிப்பதனாலும் முடியின் ஆரோக்கியம் பாதிப்படைவதைத் தடுப்பது மிகவும் கடினமானதாகவே உள்ளது. ஆனால் சில முறைகளை பின்பற்றுவதனால் முடியின் ஆரோக்கியத்தை சிறப்பாக பேண முடியும்.

சூரியன் நேரடியாக முடியினை எரித்து விடுவதில்லை. ஆனால் முடியின் இயற்கையான பாதுகாக்கும் படலத்தை அழித்து விடுவதுடன் முடியின் ஈரப்பதத்தை குறைப்பதுடன் உப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றது.

இதனால் முடி உலர்வடைவதுடன் முடி உதிரும் அளவு அதிகரிக்கின்றது. இதிலிருந்து முடியினை பாதுகாப்பது எப்படி?

கோடைக்காலத்தில் முடியினைப் பாதுகாப்பது எப்படி?

1. வெப்பம் அதிகமுள்ள முடி பராமரிப்பு பொருட்களை தவிர்த்தல்.
சூரிய வெப்பத்தினால் முடி உலர்வடைந்த நிலையில் மேலும் வெப்பத்தை வெளிப்படுத்தும் பொருட்களான டிரையர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.
தேவைப்படின் சூடான டிரையருக்குப் பதிலாக குளிரான டிரையர் பயன்படுத்துவது சிறந்தது. அத்துடன் சூடான் நீர் பயன்படுத்துவதற்குப் பதிலாக குளிரான நீரில் குளிப்பது முடிக்குச் சிறந்தது.

2. முடி வெட்டுதல்.
முடியின் நுனிப்பகுதி வெடிப்பது என்பது சாதாரணமனதே. ஆனால் கோடைக் காலத்தில் முடி நுனிப்பகுதி வெடிப்பது அதிகமானது. அதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் பாதிப்படைந்த முடியின் நுனிப்பகுதியை வெட்டுவதனால் மேலும் முடி பாதிப்படையாமல் தடுக்க முடியும். அத்துடன் முடியின் நுனிப்பகுதியைப் பாதுகாக்கும் சம்போக்களை பயன்படுத்துவது அவசியமானது.

3. முடியைப் பாதுகாத்தல்.
சூரிய வெளிச்சத்தில் இருந்து பாதுகாப்பதற்கு வெளியே செல்லும் போது முடியை தொப்பி அணிந்து அல்லது ஸ்கார்வ் அணிந்து செல்வது சிறந்தது.

4. தினமும் முடியை கழுவுவதை தவிர்த்தல்.
தினமும் குளிப்பதனால் தான் முடி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம் என்று நினைத்தால் அது மிகவும் தவறானது. அவ்வாறு செய்வதனால் தலைப்பகுதியில் எண்ணெய்த் தன்மை அதிகரிக்கும். எனவே வாரத்தில் மூன்று தடவைகள் முடியைக் கழுவுவது போதுமானது.


5. அதிகமான நீரை அருந்துதல்.
தினமும் 4 லீட்டர்கள் வரை நீரை அருந்துவதனால் சருமம் மற்றும் தலைப் பகுதிகள் ஈரப்பதம் அதிகரித்து முடியின் வேர்ப் பகுதிகள் பாதிப்படையாமல் பாதுகாக்கின்றது. இதனால் முடி உதிர்வதும் குறைவடைகிறது.

6. சரியான சீப்பைப் பயன்படுத்தல்.
இடைவெளி அதிகம் உள்ள சீப்பைப் பயன்படுத்துவதனால் முடி சிக்குகளை நீக்கும் போது முடி உதிராமல் பாதுகாக்கின்றது.

7. எண்ணெய்ச் சிகிச்சை.
கோடை காலத்தில் எண்ணெய் சிகிச்சை எடுப்பதன் மூலம் தலையின் ஈரப்பதத்தை பேணுவதுடன், முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. பொதுவாக ஒலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், றோஸ்மெரி எண்ணெய் போன்றவற்றைப் பயனப்டுத்துவது சிறந்தது.

8. கண்டிஸ்னர்.
உங்கள் முடியின் தன்மைக்கு ஏற்றவாறு சிறந்த கண்டிஸ்னர் பயன்படுத்துவது அவசியமானது. நீங்கள் நீச்சலுக்கு செல்வதாக இருந்தாலும் தகுந்த கண்டிஸ்னர் பயன்படுத்தி தொப்பி அணிவது முடியின் பாதுகாப்பிற்கு சிறப்பானது.

முட்டை மஞ்சள் கரு ஒலிவ் எண்ணெய் கண்டிஸ்னர்.
முட்டை மஞ்சள் கரு மற்றும் ஒலிவ் எண்ணெய் முடியினை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் பாதுகாக்கின்றது. ஒரு பாத்திரத்தில் 2 முட்டை மஞ்சள் கருவும் 2 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய்யும் எடுத்துக் கொள்ளவும். அதனை நன்றாக கலக்கவும். தேவைப்படின் சிறிதளவு நீரைச் சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை தலை முழுவதும் நன்றாகப் பூசி 2 மணி நேரங்களின் பின்னர் சம்போ பயன்படுத்தி குளிக்கவும். வாரத்தில் இரு தடவைகள் இவ்வாறு செய்வது சிறப்பானது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!