உலக நாயகன் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலமையா..? ரசிகர்கள் அதிர்ச்சி..!


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் புது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல் மகள் ஸ்ருதிஹாசன் களமிறங்க உள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் ‘ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கோலிவுட் மட்டுமில்லாமல், டோலிவுட்டிலும் ஏராளமான படவாய்ப்புகள் கிடைத்தன. தனது அசத்தலான நடிப்பால் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்தார்.

இப்படி தன்னை சிறந்த நடிகையாக முன்னிறுத்திக் கொண்ட ஸ்ருதி, தற்போது டிவி தொகுப்பாளராகும் களமிறங்கியுள்ளர். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘ஹலோ சகோ’ எனும் நிகழ்ச்சியில் பணிப்புரிய உள்ளார்.

இதேபோன்று ஸ்வர்ணமாலயா, அர்ச்சனா தொகுத்து வழங்கிய ‘இளமை புதுமை’ நிகழ்ச்சி சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. பொதுமக்களை வைத்து நடத்தப்படும் இந்த டாக் ஷோ அன்றைய மக்களிடையே மிகவும் பிரபலமானது. அந்நிகழ்ச்சியை போல இந்நிகழ்ச்சி இருக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே திரைப்பட நடிகர்களான கமல்ஹாசன், சூர்யா, பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி என பலர் தொலைகாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர். இதையடுத்து விஷால், வரலெட்சுமி போன்ற புதிய தொகுப்பாளர் வரிசையில் தற்போது ஸ்ருதி ஹாசனும் இணைந்துள்ளார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!