பளபளப்பான சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்துவது எப்படி?


சருமத்தின் பொலிவிற்கு நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பயன்படுத்தி வரும் தேங்காய் எண்ணெய்யிற்கு ஈடு இணை எதுவும் இல்லையென்பதே நிதர்சனமான உண்மை.

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதனால் சருமம் ஈரலிப்பாக இருப்பதுடன், பருக்கள், கரும்புள்ளிகளை குணப்படுத்தி தெளிவான சருமத்தினைப் பெற முடியும்.

தேங்காய் எண்ணெய் விலை குறைவானதாக இருப்பதுடன், இதனைப் பயன்படுத்துவதும் இலகுவானது. அத்துடன் இது எல்லாவிதமான சருமங்களிற்கும் ஒத்துப் போகும் தன்மை கொண்டது.

தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்துவது எப்படி?

1. தெளிவான சருமத்திற்கு.
தேன், ஓட்ஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பாத்திரம் ஒன்றில் கலந்து சருமத்தில் தேய்த்துக் கழுவவும், தேங்காய் எண்ணெய்யும், ஓட்ஸும் சருமத் தொல்லைகளை நீக்குவதுடன், தேன் ஈரலிப்பாக வித்திருக்க உதவும்.

2. கரும்புள்ளிகளை நீக்குவதற்கு.
பருக்கள் வந்த அடையாளங்கள், கரும்புள்ளிகள் காணப்பட்டால் அதற்கு தேங்காய் எண்ணெய்யும், லாவண்டர் எண்ணெய்யும் கலந்த கலவையை கறுப்பு போத்தலில் வைத்து தினமும் தூங்குவதற்கு முன் அந்தக் கலவையினால் மசாஜ் செய்து வரவும்.


3. உலர்ந்த சருமத்திற்கு.
தேனும் தேங்காய் எண்ணெய்யும் சேர்ந்த கலவையை முகத்திற்கு பூசி சில நிமிடங்களின் பின் கழுவவும். இதனால் சருமம் ஈரலிப்பாக பேண முடியும்.

4. சரும சுத்திகரிப்பிற்கு.
தேங்காய் எண்ணெய்யையும் சமையல் சோடாவையும் சேர்த்துப் பயன்படுத்துவதனால் சருமத்தை இலகுவாகச் சுத்தப்படுத்துகிறது. இவை இலகுவாக சருமத்தில் உருகும் தன்மை இருப்பதனால் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை சருமத்தின் ஆழம் வரைச் சென்று சுத்தப்படுத்தும்.

5. சரும நிறத்தைப் பேணுவதற்கு.
சரும நிறத்தைப் பேணுவதற்கு தேங்காய் எண்ணெய், மஞ்சள், பால் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். பாலில் உள்ள லக்டிக் அமிலம் சருமத்தைப் பளபளப்பாக்கும். மேலும் மஞ்சளிற்கும் தேங்காய் எண்ணெய்யிற்கும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உள்ளது.

6. பளபளப்பான சருமத்திற்கு.
தேங்காய் எண்ணெய்யுடன் விட்டமின் ஈ காப்ஸ்யூல் சேர்த்தஉ சருமத்தில் தேய்த்து 15 நிமிடங்களின் பின் கழுவுவதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன், ஈரலிப்பாகவும் இருக்கும். அத்துடன் இது சருமம் முதிர்வடைவதை தடுக்கும். இதனை இரவு நேரங்களில் பயன்படுத்துவதனால் சருமம் பளபளப்பாகக் காணப்படும்.

7. வயதடைவதை தடுப்பதற்கு.
தேங்காய் எண்ணெய்யிற்குள் சிறிதளவு றோஸ்கிப் எண்ணெய் சேர்த்து சருமத்திற்குப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தின் பின் திசுவினால் துடைக்கவும். றோஸ்கிப் எண்ணெய் கொலாஜன் உருவாக்கத்தை அதிகப்படுத்தி கல்ங்கள் புத்துணர்ச்சி பெறவும் உதவுகிறது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!