சின்மயி தான்தோன்றித்தனமாக பேசக்கூடியவர் அல்ல..!! போட்டுத்தாக்கிய நடிகை ஸ்ரீபிரியா..!!


நடிகைகள் பாலியல் தொடர்பு புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நடிகர் சங்கத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எந்த ஒரு புகார் என்றாலும் விசாரிக்கப்பட வேண்டும்.

சின்மயி பொறுப்பானவர். தான்தோன்றித்தனமாக பேசக்கூடியவர் அல்ல. ஏன்? முன்பே அவர் சொல்லவில்லை என்பது இரண்டாம்பட்சம். இப்போதாவது வெளியானதே என்பது முக்கியம்.

இதனால் வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் குறையும். திரைத்துறை மட்டுமல்ல, எந்த இடத்தில் பெண்களுக்கு தொல்லைகள் நேர்ந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!