பலாத்கார குற்றங்களை தடுக்க உதவும் ‘செக்ஸ் ரோபோட்’கள்.! அனுமதிக்குமா இந்தியா?


உலக நாடுகளில் பெண்களுக்கான பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறதென்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆண்களினால் தான் இப்பொழுது அவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது கொடுமை. robots ready to keep in touch with people family with sex robots scientists inform.

உலக நாடுகளில் பெண்களுக்கான பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறதென்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆண்களினால் தான் இப்பொழுது அவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது கொடுமை.

பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் நடந்த காலம் மலையேறி, பிஞ்சு குழந்தைகளும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் அவலம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொடர்ந்து நடைபெறும் இந்தக் கொடுமைக்கு இந்தியா எப்படித் தீர்வு காணப்போகிறது.

பாலியல் குற்றங்கள்
அமெரிக்கா, ஜப்பான் போன்ற அயல் நாடுகளில் செக்ஸ் ரோபோட்களின் பயன்பாட்டிற்கு அந்நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது. செக்ஸ் ரோபோட்களால், அந்நாடுகளில் நடைபெற்று வந்த பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளதாக அண்மையில் வந்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக்ஸ் அண்ட்ராய்ட்ஸ்
செக்ஸ் ரோபோட்களா.! அப்படி என்றால் என்ன?
குடும்ப வாழ்க்கைக்காகவும், உடலுறவு கொள்வதற்காகவும் பிரத்தியேக செக்ஸ் ரோபோட்களை ரோபோட் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த வகை ரோபோட்களுக்கு “செக்ஸ் அண்ட்ராய்ட்ஸ்” என்ற பெயரையும் விஞ்ஞானிகள் வழங்கியுள்ளனர். ஆண் செக்ஸ் ரோபோட் மற்றும் பெண் செக்ஸ் ரோபோட் என இரண்டு பாலினருக்கும் ஏற்ற வகையில் இந்த ரோபோட்கள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


2025 ஆம் ஆண்டு
பல நாடுகளில் செக்ஸ் டால்ஸ் பயன்படுத்தும் முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகின்றது. அதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் ரோபோக்களுடன் உறவு கொள்ள அதிகம் விரும்புவார்கள் என்றும், விபசார விடுதிகள், கிளப்புகள் போன்ற இடங்களில் நிச்சயம் ரோபோட்களை வைத்து செக்ஸ் பிசினஸ் செய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கஸ்டமைஸ் ஆப்ஷன்
தற்பொழுது உள்ள அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மனிதருக்கு நிகரான மனிதரைப் போலவே நடந்துகொள்ளும் ரோபோட்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இவற்றின் தோற்றத்தை உங்களுக்குப் பிடித்த விதத்தில் மாற்றிக்கொள்ளும் கஸ்டமைஸ் ஆப்ஷன்களும் வழுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரோபோட் ஸ்கின் பாகம்
கஸ்டமைஸிங் மாற்றத்திற்காகப் பிரத்தியேக மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது, இதில் உங்கள் ரோபோட் முகம், கூந்தல் மற்றும் மற்ற உறுப்புகளை வடிவமைத்துக்கொள்ள முடியும். நீங்கள் வடிவமைத்த டிசைன்னை ரோபோட் நிறுவனத்தின் வலைத்தளத்தில் ஷேர் செய்து, உங்களின் ரோபோட் ஸ்கின் பாகங்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏ.ஐ செக்ஸ் ரோபோட்
இந்த செக்ஸ் ரோபோட்கள் ஏ.ஐ சேவையுடன் வருவதால், பயனரின் தேவைகளை அறிந்து நடந்துகொள்ளும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எய்ட்ஸ் மற்றும் பாலின நோய்கள் வராமலும் இவை பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் அறிமுகமான செக்ஸ் பொம்மைகள் தனிப்பட்ட நபர்களின் இச்சையைத் தீர்த்து வைத்திருக்கிறது, இதனால் அந்நாட்டில் நடைபெற்ற பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளதாக ஆய்வின் மூட்டுகள் தெரிவிக்கின்றது.

விஞ்ஞானிகள் சொல்வது சரியாக இருக்குமா?
இந்தியாவில் செக்ஸ் டாய்ஸ்களுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செக்ஸ் ரோபோட்களை இந்தியா அனுமதிக்குமா என்ற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான மாற்று வழியாக இந்த செக்ஸ் ரோபோட்கள் இருக்குமென்று விஞ்ஞானிகள் சொல்வது சரியாக இருக்குமா?

பாடிகார்டு ரோபோட்
மனித இனமே அழிய, மனிதனே கண்டுபிடித்த ஒரு அற்புத கண்டுபிடிப்பான ரோபோட்கள் மாறிவிடும் என்று பலதரப்பில் பேசப்பட்டுவந்தாலும். இந்த செக்ஸ் ரோபோட்கள், அழிவை ஏற்படுத்துமா அல்லது நல்ல மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விஞ்ஞானிகள் சொன்ன 2025 மிக அருகில் தான் உள்ளது, பார்க்கலாம் பெண்களின் பாதுகாப்பிற்கு ரோபோட்கள் ஏதேனும் வழி வகுக்குமா என்று. செக்ஸ் ரோபோட்களுக்கு பதிலாக, பெண்களின் பாதுகாவலனாக செயல்படும் பாடிகார்டு ரோபோட்கள் உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்.- Source: gizbot

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!