10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் ஷர்துல் தாகூருக்கு நேர்ந்த சோகம்…!


இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்டில் விளையாடிய முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் ஷர்துல் தாகூர் அணியில் அறிமுகமானார். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அறிமுகம் ஆன ஷர்துல் தாகூர் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார்.

சிறப்பாக பந்து வீசி இந்திய டெஸ்ட் அணி வேகப்பந்து வீச்சு யுனிட்டில் இடம்பிடிக்க வேண்டும் போன்ற ஆயிரம் கனவுகளோடு களம் இறங்கினார்.

உமேஷ் யாதவ் உடன் இணைந்து புதிய பந்தில் பந்து வீசினார். முதல் ஒவரில் 1 ரன் விட்டுக்கொடுத்தார். 2-வது ஓவரின் 4-வது பந்தை வீசும்போது காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். பிறகு அவருக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று முழுவதும் பீல்டிங் செய்ய வரமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இன்று ஸ்கேன் செய்து பார்த்த பிறகே மீதமுள்ள நான்கு நாட்கள் விளையாடுவாரா? என்பது தெரியவரும். அறிமுக டெஸ்டில் வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் சோகத்துடன் வெளியேறியுள்ளார் சர்துல் தாகூர்.-Source: maalaimalar

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!