மாத்தளை – இந்து தேசியக் கல்­லூரி மாணவர்கள் இருவர் தாய்வான் பயணம்…!


இலங்கை புத்­தாக்­குநர் ஆணைக்­கு­ழுவின் சஹ­சக 2017 இல் நடை­பெற்ற தேசிய வேலைத்­திட்­டத்தின் கீழ் பாட­சாலை மட்­டத்­திற்­கான போட்­டியில் விவ­சாயத் துறையில் அகில இலங்கை ரீதி­யாக முதலாம் இடத்தைப் பெற்­றுக் ­கொண்­ட­தற்­கி­ணங்க சர்­வ­தேச ரீதி­யான போட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்­காக மாத்­தளை இந்து தேசியக் கல்­லூரி மாண­வர்­க­ளான வி.கேஷான் குமார், வி.விஜித்­குமார் சகோ­த­ரர்கள் எதிர்­வரும் டிசம்பர் 5 ஆம் திகதி தாய்வான் பய­ண­மா­கின்­றனர்.

கேஷான் குமார் 2016 ஆம் ஆண்டு புத்­தாக்­குநர் வேலைத்­திட்­டத்தின் கீழ் நடந்த போட்­டியில் தூசு அகற்றும் ரொபோ கருவி ஒன்றை செய்து தேசிய மட்­டம்­ வரை பங்­கு­பற்­றினார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வி.கேஷான் குமார், வி.விஜித்­குமார் சகோ­த­ரர்கள் இலத்­தி­ர­னியல் பழம் பறிக்கும் கருவி ஒன்றை செய்து பாட­சாலை மட்­டத்­திலும், வலய மட்­டத்­திலும், மாகாண மட்­டத்­திலும் தெரிவு செய்­யப்­பட்டு தேசிய மட்­டத்தில் அகில இலங்கை ரீதி­யாக விவ­சாயத் துறைக்­கான புத்­தாக்­குநர் போட்­டியில் முதலாம் இடத்­தைப்­ பெற்று தாய்­வானில் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேசப் போட்­டியில் பங்­கு­பற்ற உள்­ளனர்.

சர்­வ­தேச ரீதி­யாக இம்­ மா­ண­வர்­களை பங்­கு­பற்ற செய்யும் முயற்­சியில் மாண­வர்­களின் பெற்­றோ­ரின் பங்­க­ளிப்பு பாராட்­டத்­தக்­கது. மேலும் இவர்­களின் புத்­தாக்க செயற்­பாட்டு கரு­வியை மெரு­கூட்டி தேவை­யான ஆலோ­ச­னை­களை வழங்கி ஊக்­கு­வித்­த­வர்கள் கல்­லூ­ரியின் அதிபர், பிரதி அதிபர், விஞ்­ஞான பாட ஆசி­ரி­யர்கள் ஆகியோர் ஆவர்.

இம்­மா­ண­வர்கள் தமது பெற்­றோ­ருக்கும், பாட­சா­லைக்கும் மற்றும் எமது நாட்­டிற்கும் பெருமை சேர்த்­துள்­ளனர். சர்­வ­தேச ரீதி­யிலும் இப்­போட்­டியில் வெற்றி வாகை­சூட கல்­லூ­ரியின் சார்­பாக அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்துகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!