செல்பி எடுக்க வந்த ரசிகர்கள்… ‘குணமாக’ அட்வைஸ் செய்து கிளம்பிய அஜித் – வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் தல என்று செல்லப் பெயரிட்டு மரியாதையாக அழைக்கின்றனர். ஆனால் அஜித் ரசிகர்களுடனான சந்திப்புகளை தவிர்த்தே வருகிறார்.

இந்நிலையில் அஜித் தனது மகள் படிக்கும் பள்ளிக்கு சமீபத்தில் சென்றார். அப்போது அந்த பள்ளியில் வேலை செய்யும் பணியாளர்கள் சிலர், அஜித்துடன் செல்பி எடுக்க முற்பட்டனர்.

ஆனால் இதை விரும்பாத அஜித், ரசிகர்களிடம் கனிவாக பேசி பள்ளி வளாகத்தில் செல்பி எடுக்கக் கூடாது என அறிவுரை வழங்கினார். “இது பள்ளி வளாகம் இங்கே செல்போன் பயன்படுத்தக் கூடாது. செல்பி எடுக்கக் கூடாது. நானே உங்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொள்கிறேன்”, என அந்த வீடியோவில் அவர் கூறுகிறார்.

ஆனால் அஜித் அவ்வளவு சொல்லியும், யாரோ ஒரு ரசிகர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டுவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்