ஆன்–லைன் திருமணத்தால் சாப்ட்வேர் என்ஜினீயருக்கு ஏற்பட்ட சோகம்…!


ஆன்–லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி என்ஜினீயரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.

திருமண தகவல் மையம்
புனே, ஹிங்னே குர்டு பகுதியை சேர்ந்த 31 வயது சாப்ட்வேர் என்ஜினீயர் திருமணத்திற்கு வரன் தேடி ஆன்–லைன் திருமண தகவல் மையத்தில் பெயரை பதிவு செய்து இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சாப்ட்வேர் என்ஜினீயருக்கு, அதன் மூலம் பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். 2 பேரும் செல்போன் எண்ணை பரிமாறி கொண்டு பேசினர். பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர்.

ரூ.2 லட்சம் மோசடி
இந்தநிலையில் ஒரு நாள் என்ஜினீயரை போனில் தொடர்பு கொண்ட பெண் அவரது தந்தை மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிகிச்சைக்காக பணம் தேவைப்படுவதாகவும் கூறினார்.

இதையடுத்து என்ஜினீயர் பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு ரூ.2 லட்சத்தை அனுப்பினார். அதன்பிறகு என்ஜினீயர் பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதன்மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த என்ஜினீயர் ஆன்–லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பணமோசடி செய்த பெண் குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் நூதன முறையில் என்ஜினீயரை ஏமாற்றிய இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!