கொழும்பு நகரை விடுதலைப் புலிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்க திட்டமிட்டனர் – மைத்திரி..!


ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அங்கு வாழும் சிங்களத்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டதாக அப்போது மைத்ரிபாலா சிறிசேனா குறிப்பிட்டார்.

அந்த காலகட்டத்தில் இலங்கையின் அந்நாள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் ராணுவ தளபதி அனைவருமே வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர். தற்காலிக ராணுவ மந்திரியாக அப்போது நான் பொறுப்பேற்றிருந்தேன்.

சென்னையில் இருந்தோ, வேறேதாவது காட்டுப் பகுதியில் இருந்தோ கொழும்பு நகரில் உள்ள சில முக்கிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் வான்வழியாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்தது. இதை தொடர்ந்து அனைவரும் வெளியேறி விட்டனர்.

தாக்குதலுக்கு பயந்து நானும் கொழும்புவை விட்டு வெளியேறி வெவ்வேறு பகுதிகளில் அப்போது தங்கி இருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் கொழும்பு நகரின்மீது இருமுறை விமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!