33 ஆண்டுகளுக்கு பின் தந்தையின் தீர்ப்பை மாற்றிய மகன்…..!


தகாத உறவு கிரிமினல் குற்றம் ஆகாது. தகாத உறவில் ஆணுக்கு மட்டுமே தண்டனை விதிக்கும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497 செல்லாது என்று ஜோசப் ஷைன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் சேர்ந்து நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி.சந்திரசூட், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்.

அவர் தலைமை நீதிபதி பதவி வகித்தபோது, 1985-ம் ஆண்டு சவுமித்ரி விஷ்ணு வழக்கை விசாரித்து, இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 497 செல்லுபடியாகும் என தீர்ப்பு அளித்துள்ளார்.

தனது தந்தை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் 33 ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த தீர்ப்பை இப்போது மகன் டி.ஒய்.சந்திரசூட் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!