முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினரை கொலை செய்ய சதி முயற்சி அம்பலம்..!!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், மஹிந்த ராஜபக்ச குடும்பத்தையும் படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழல் ஒழிப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவை அண்மையில் சந்திப்பதற்காக வந்திருந்த இந்திய பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்த இந்தியப் பிரஜையிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்திய போது கொலைச் சதித் திட்டங்கள் பற்றிய விபரங்கள் அம்பலமாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச மட்டுமன்றி முன்னளாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என குறித்த இந்தியர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் தொடர்பில் நேற்று மாலை கொழும்பு கோட்டே நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

எம்.தோமஸ் என்ற இந்தியர் இந்த தகவல்களை வழங்கியுள்ளார்.

யாருடன் இணைந்து இந்த கொலைச் சதித் திட்டங்களை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நீண்ட விசாரணை நடத்தப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் முனசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான இந்தியரிடம் மேலதிக விசாரணை நடத்தி அது தொடர்பில் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் லங்கா ஜயரட்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டார்.

சுற்றுலா வீசா அடிப்படையில் இலங்கைக்கு வந்த தோமஸ் என்ற இந்தியர் வீசா காலம் பூர்த்தியானதன் பின்னரும் இலங்கையில் தங்கியிருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாமல் குமாரவின் குரலை அடையாளம் காணும் நோக்கில் நாமல் குமாரவை அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பிரிவில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.source-tamilwin

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!