இனிமேல் அடுத்த பிரதமர் இவர்தானாம்..? முடிவு செய்கிறார் ஸ்டாலின்..!!


மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் புகழ் வணக்க கூட்டம் ஊட்டியில் இருக்கும் ஒய்.டபிள்யு.சி.ஏ. அரங்கில் நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் இதற்கு தலைமை தாங்கினார். தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. மற்றும் புலவர் ராமலிங்கம், கவிஞர் நந்தலாலா ஆகியோர் கருணாநிதி உருவப்படத்துக்கு நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

பிறகு திருச்சி சிவா எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு சகாப்தம். அவர் இல்லாத சூழலில், பல இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன. மு.க.ஸ்டாலினும் துணிச்சலுடன் கருணாநிதியை போலவே, உறுதியுடனும் செயல்படுவதால் பெரியார் சிலை அவமதிப்பை வன்மையாக கண்டிக்கிறார்.

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் உறுதி ஏற்றபோது மத்திய அரசு தமிழகத்தை காவி மயமாக்குவதை பா.ஜனதா அரசு என்று கூறவில்லை. மோடி என்று குறிப்பிட்டு கூறவில்லை. பன்முக தன்மை கொண்ட இந்தியாவை ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று மாற்ற நினைக்கும் மத்திய பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் ஊழல் புரிந்த அரசை மாற்ற வேண்டும். எச்.ராஜா மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்தும், மத்திய அரசுக்கு பயந்து தமிழக அரசு அவரை கைது செய்யவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது மு.க.ஸ்டாலின் தான் நாட்டின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வார்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி எதிர்க்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து, கவர்னரிடம் பா.ஜனதா எம்.பி. ஒருவர் ‘எப்படி ஆட்சியில் இருக்கும் அரசை போராட அனுமதிக்கிறீர்கள்‘ என்று கேட்டு மனு கொடுத்திருக்கிறார். ஆனால் அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும்போது மத்திய பா.ஜனதா அரசு கண்ணை கட்டி கொண்டு இருக்கிறது என்று அவர் கூறினார்.source-seithipunal

* இந்த பதிஉங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!