கைது செய்யப்பட்ட தமிழக எம்.எல்.ஏ. சிறையில்.. பரபரப்பான சூழ்நிலையில் தொண்டர்கள்..!!


திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றம்சாட்டி. அவரது சாலிகிராமம் வீட்டில் வைத்து 23-ந் தேதியன்று காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் அடுத்த மாதம் அக்டோபர் 5-ந் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டால், சட்டசபை விதிகளின்படி அதுகுறித்து சபாநாயகரிடம் காவல் துறை மற்றும் சிறைத்துறையினர் தகவல் தெரிவிக்க வேண்டும். இதனால், சபாநாயகர் ப.தனபாலுக்கு, எம்.எல்.ஏ. கருணாஸ் கைது குறித்து சென்னை காவல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தபால் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

அதுபோல கருணாஸ் அடைக்கப்பட்டு இருக்கும் சிறையின் விவரங்கள் பற்றி சிறைத்துறை ஐ.ஜி., சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் எழுதி உள்ளார். சபாநாயகருக்கு தபால் மூலம் வந்துள்ள கடிதத்தில், கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கான காரணம், அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் சட்டப்பிரிவுகள், அவர் அடைக்கப்பட்டு இருக்கும் சிறை பற்றிய முழு விவரங்கள் இருக்கிறது.

எம்.எல்.ஏ. கருணாஸ் கைது பற்றிய தகவல்களை சட்டசபை விதிகளின்படி, மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் தனபால் தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சட்டசபை வட்டாரம் தறிவித்துள்ளது.source-vikatan

* இந்த பதிஉங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!