காமம் கண்ணை மறைத்து அனைத்தையும் இழந்துவிட்டேன்..!! சிறைக்குள் கதறும் அபிராமி..!!


சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கள்ளக்காதலனுடன் வாழ்வதற்கு ஆசைப்பட்டு தனது அழகான இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. இதனையடுத்து பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களும் வெளியாகின.

கள்ள காதலனின் ஆசை வார்த்தையால் அநியாயமாக குழந்தைகளை கொலை செய்துவிட்டேன் என புலம்பி வருகிறாராம் அபிராமி. மேலும் சிறையில் சக கைதிகளும் என்ன நடந்தது என கேட்கின்றனராம்.

மேலும் அபிராமி பல நாட்களாக சாப்பிடாமல், தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார். தற்போது அவர் செய்த தவறிற்காக பேரும் வேதனையை அடைந்துவருகிறார் என கூறுகின்றனர். காமம் கண்ணை மறைத்து அனைத்தையும் இழந்துவிட்டோமே என கதறுகிறாராம் அபிராமி.

தற்போது சிறையில் தண்டனை அனுபவித்துவரும் அபிராமி, அவர் தன்னை யாராவது ஜாமீனில் எடுக்குமாறு தங்கள் உறவினர்களிடம் கதறுவதாகவும் கூறப்படுகிறது.source-seithipunal

* இந்த பதிஉங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!