அவர் தைரியமான வீரர்.. ஒரு சிறந்த கேப்டன்..!! சவுரவ் கங்குலி புகழாரம்..!!


இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்களில் சிலர் கூறும்போது, நான் ஒருவனே இந்திய வீரர்களின் 10 விக்கெட்டையும் கைப்பற்றுவேன், கோலி இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவு என வெற்று வாய் சவடால் விட்டனர். ஆனால் நிஜத்தில் நடந்ததோ வேறு, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளையும் சேர்த்து அவர்கள் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் போராடி கடைசி ஓவரில் தான் வெற்றி பெற்றனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் மீதும், கேப்டன் சர்பராஸ் அகமது மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சர்பராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன் என புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

சர்பிராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன், அவரை போன்ற வீரர்கள் தினம் தினம் பிறந்து வர மாட்டார்கள். கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்ற அவர் ஒரு தைரியமான வீரர்.

ஆசிய கோப்பை தோல்விகளால் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் சேர்ந்து அவரை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும் என கங்குலி கூறினார்.source-maalaimalar

* இந்த பதிஉங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!