நடிகை ஷில்பா ஷெட்டி விமான நிலையத்தில் நடந்த இனவெறி நடவடிக்கை..!


இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி நேற்று ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்ற அவர் மெல்போனில் இறங்கினார்.

அவர் தன்னுடன் 2 பேக்குகளை எடுத்துச் சென்று இருந்தார். அவற்றை விமானநிலைய பெண் ஊழியர் கரம்பி என்பவர் சோதனை செய்தார்.

அப்போது அவரது பேச்சு, செயல்பாடு மற்றும் நடவடிக்கை இனவெறி பாகுபாட்டை காட்டுவதாக இருந்தது என ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

அது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் மெல்போனுக்கு பிசினஸ் வகுப்பு டிக்கெட்டில் பயணம் செய்தேன். நான் எடுத்துச் சென்ற 2 பேக்குகள் சம்பந்தப்பட்ட கவுண்டரில் சோதனை நடத்தப்பட்டது.

அங்கு பணியில் இருந்த கரம்பி என்ற பெண் ஊழியரின் பேச்சும் நடவடிக்கையும் கொடூரமாக இருந்தது. நான் துணிமணிகள் எடுத்துச் சென்ற ஒரு ‘பேக்’ பாதி அளவு காலியாக இருந்தது. ஆனால் அது மிகப் பெரியதாக உள்ளது என வாக்குவாதம் செய்தார். அதுகுறித்து கவுண்ட்டரில் இருந்த அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது இது ஒரு நடைமுறை தான் என சாதாரணமாக கூறினார்.

சாதாரண நடைமுறை என்றால் அந்த ‘பேக்கை பரிசோதிக்க 5 நிமிடம் மட்டும் போதும். ஏன் நீண்ட நேரம் பரிசோதிக்க வேண்டும். இதுகுறித்து அவருடன் இருந்த சக ஊழியர்களிடம் மேல்முறையீடு செய்த போதும் அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளாமல் கரம்பி கூறியதையே பதிலாக தெரிவித்தனர். அது ஒரு இனவெறி நடவடிக்கையாகும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிஉங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!