பேட்ட… நடிகை சிம்ரன்னுக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா.?


தமிழ் சினிமாவின் 1990-களில் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்த சிம்ரன் இப்போது அம்மா, அண்ணி வேடங்களுக்கு நகர்ந்துவிட்டாலும் ரசிகர்களின் நினைவுக் கோட்டையில் தேவதையாக வாழ்கிறார்.

கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கண்களாலும், உடல் மொழியாலும், உணர்வுகளாலும் நடித்து ரசிகர்களை ஈர்த்தவா். சிம்ரனை பெரும்பாலானோர் விரும்புவதற்குக் காரணம், அவரது நடிப்பு. சிம்ரனின் கண்கள் உணர்வுகளைச் சொல்லக்கூடியவை.

சிம்ரன் என்றவுடன் நினைவுக்கு வருவது அவரது மெல்லிடை. இன்றைக்கும் இடுப்பை ஆட்டி நடக்கும் பெண்களை ‘மனசுல சிம்ரன்னு நெனைப்பு’ என கிண்டல் செய்வதை கேட்கலாம்.

தமிழ் சினிமாவில் சிறப்பாக ஆடத்தெரிந்த சில நடிகைகளில் சிம்ரனும் ஒருவர் மேலும் அவர் சிறந்த பரதநாட்டியக் கலைஞரும் கூட. முன்னணி நடிகையாகப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, ‘பார்த்தேன் ரசித்தேன்’ படத்தில் நெகட்டிவ் ரோலிலும் நடித்தார்.

இப்போது நயன்தாராவும், அனுஷ்காவும் பிடித்திருக்கும் இடத்தை சிம்ரன் தனி ஒருத்தியாக தன் கையில் வைத்திருந்தார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சிம்ரன் ரஜினியுடன் நடிக்க மட்டும் இதுவரை வாய்ப்பு அமையாமல் இருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. நடிகை ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை சிம்ரன் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சிம்ரன் அந்த படத்தில் ஒரு சில நாட்கள் நடித்து வந்தாராம். ஆனால், அப்போது தான் சிம்ரன் கற்பமாக இருக்கிறார் என்ற விஷயம் தெரியவர அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

சிம்ரனின் நிலைமையை புரிந்து கொண்டு இயக்குனர் பி.வாசுவும் சிம்ரன் படத்தில் இருந்து விலக சம்மதித்துவிட்டாராம்.

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின்னர் நடிகை சிம்ரன் முதன் முறையாக ரஜினியுடன் “பேட்ட“ படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “பேட்ட” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் எதற்காக இந்த புகைப்படத்தில் “பேட்ட” என்று பதிவிட்டுள்ளார் என்று குழம்பி வருகின்றனர்.

Simran

@SimranbaggaOffc
Petta

2:02 PM – Sep 16, 2018
10.5K
1,066 people are talking about this
Twitter Ads info and privacy

மீண்டும் நடிக்க வந்த சிம்ரன்னுக்கு சரியான பிரேக் கிடைக்காமல் அல்லாடுகிறார். காலா படம் ஈஸ்வரி ராவுக்கு கை கொடுத்தது போன்று சிம்ரனுக்கு இந்த படம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!