காலை கழுவி தீர்த்தமாக குடித்த நிர்வாகி – வாங்கி கட்டிய பாஜக எம்பி..!


பாஜக எம்பி நிஷிகாந்த் துபேயின் கால்களை கழுவி நீரை தீர்த்தம் போல் கட்சி பிரமுகர் குடிக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கட்சியில் உள்ள மோடி முதல் உள்ளூர் நிர்வாகி வரையில், அவர்களின் பிற்போக்குத்தனமான பேச்சு, செயல் போன்றவை அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. எதிர்கட்சியினர், மாற்று மதத்தினர் என பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை சம்பாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் ஆர்வமிகுதியில் செய்த கேவலமான செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் பாலம் அடித்தளம் நாட்டுவதற்காக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அங்கு வந்தார்.

அப்போது கட்சியின் பிரமுகர் ஒருவர், எம்பியின் கால்களை கழுவினார்.

கழுவியதோடு நில்லாமல் அந்த தண்ணீரை தீர்த்தம் போல் எடுத்து குடித்து சுற்றியிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இது அதிர்ச்சியை அளித்தது மட்டுமல்லாமல் முட்டாள்தனமாகவுள்ளது என்றும் பலர் கடுமையாக விமர்சித்தனர்.

கட்சி நிர்வாகிதான் ஆர்வகோளாறு என்றால், சகமனிதனின் காலை கழுவுவது என்பது அடிமைத்தனம் என உணர்த்த வேண்டிய எம்பி நிஷிகாந்த், நிர்வாகி தனது காலை கழுவியபோது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இப்படம் பதிவிட்டு சில நிமிடங்களில் வைரலாக பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் கண்டித்தும், சாடியும் பதிவிட்டனர். இதையடுத்து அப்படங்களை எம்பி உடனடியாக நீக்கி விட்டார்.

இந்த சம்பவத்தை கண்டித்து பாஜகவின் பேச்சாளர் பிரதாப் நாத் ஷாதேவ், ‘இது போன்ற அநாகரீக செயல்களை பாஜக கட்சி ஒரு போதும் ஆதரிக்காது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!