கடந்த ஆண்டுகளைவிட தற்போதைய இந்திய அணி நிறைய சாதித்துள்ளது – ரவிசாஸ்திரி அதிரடி..!


இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த டெஸ்டுக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின் நீக்கப்பட்டு ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே நேற்றைய பயிற்சிக்கு பிறகு பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், ‘எதிரணிக்கு கடும் போட்டி கொடுத்து வெற்றி பெற முயற்சிப்பதே எங்களது நோக்கம். முந்தைய டெஸ்டில் நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால் இங்கிலாந்து அணியினர் எங்களை விட சிறப்பாக ஆடியதை மறுக்க முடியாது.

விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் 9 டெஸ்டுகளில் வெற்றி மற்றும் 3 தொடர்களை (வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரண்டு முறை இலங்கை மண்ணில்) கைப்பற்றி உள்ளது. இப்படியொரு குறுகிய காலக்கட்டத்தில் வேறு எந்த இந்திய அணியும் கடந்த 15-20 ஆண்டுகளில் இது போன்று சாதித்ததில்லை’ என்றார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!