தளபதியை 3 முறை தோற்கடித்த தனுஷ்..!


எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்குவர இருப்பதாக படக்குழு மறைமுகமாக அறிவித்துள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் – மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த இப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படத்தில் தனுஷின் அண்ணனாக சசிக்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தர்புகா சிவா இசையமைக்கும் படத்திலிருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் யூடியூப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பு முழுவதும் முடிந்ததாக இயக்குநர் கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தது. தனுஷ், சிசிக்குமார் மற்றும் படக்குழுவுக்கு நன்றி என்று மூன்று புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் கௌதமுக்கு சசிக்குமார் கேக் ஊட்டுகிறார். அந்த கேக்கில் ஹேப்பி தீபாவளி 2018 என எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து இத்திரைப்படம் தீபாவளியை முன்னட்டு வெளியாகும் என தெரிகிறது.

ஏற்கனவே விஜய்யின் ‘சர்கார்’ தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் இந்த படமும் தீபாவளிக்கு வெளியாவதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

காரணம் இதுவரை விஜய் படங்களுடன் தனுஷ் படங்கள் 3 முறை வெளியாகியிருக்கின்றன. ஆனால் மூன்று முறையும் தனுஷ் படமே வெற்றி பெற்றுள்ளன.

‘அழகிய தமிழ் மகனு’டன் ‘பொல்லாதவன்’, ‘வில்லு’வுடன் ‘படிக்காதவன்’, ‘ஆடுகளம்’ படத்துடன் ‘காவலன்’ ஆகிய படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் ‘காவலன்’ மட்டும் ஆவரேஜ் வெற்றியை பெற்றது. மற்ற படங்கள் தனுஷ் படங்களை விட குறைவான வசூலையே பெற்றன.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!