பிக்பாஸில் விஜயலெட்சுமி மற்றும் மும்தாஜ் இடையே குடுமிபிடி சண்டை..!


மும்தாஜூம், விஜயலெட்சுமியும் புதிய எதிரிகளாக மாறியுள்ளதால் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி சிறிது சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டி வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் புது புது சர்ச்சையை கிளப்பும் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

கடும் போட்டியாளர்களாக கருதப்பட்ட டேனியல், மஹத் கடந்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இதனால் வீட்டின் போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதைத்தொடர்ந்து இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த விஜயலெட்சுமி தற்போது தான் தன் விளையாட்டை ஆரம்பித்துள்ளார். கடைசியாக கொடுக்கப்பட்ட விளையாடி பாப்போமா டாஸ்கில் விஜயலெட்சுமி சொந்த வாயில் சூனியம் வைத்துக்கொண்டார்.

மும்தாஜூக்கும், விஜயலெட்சுமிக்கும் சிறிய மனஸ்தாபங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் எலிமினேஷனிலிருந்து காப்பதற்கு சக போட்டியாளர்கள் பிக்பாஸ் கூறுவதை செய்ய வேண்டும்.

நேற்றையை எபிசோடில் ஜனனியை காப்பாற்ற பாலாஜி மொட்டை அடித்துக்கொண்டார். அதேபோல் ஜஸ்வர்யாவை காப்பாற்ற சென்ராயன் தலைமுடியை கலர் செய்து கொண்டார்.

தற்போது இன்றைய புரோமோக்கள் வெளியாகியுள்ளது. இதில் விஜயலெட்சுமியை காப்பாற்ற ரித்விகா பிக் பாஸின் கண்ணை நன்கு தெரிகிற இடத்தில் நிரந்தர டாட்டுவாக போட்டுக்கொள்ள வேண்டும். இதை விஜயலெட்சுமி ரித்விகாவிடம் கூறுகையில் eye என்பதை தவறாக புரிந்துக்கொண்டு I என்று கூறுகிறார்.

உடனே மும்தாஜ் அது I இல்ல eye என நக்கலாக சிரிக்கிறார். உடன் பாலாஜியும் சிரிக்க விஜயலெட்சுமியின் முகம் திடீரென மாறுகிறது. இதற்கிடையில் டாட்டுவிற்கு ரித்விகா ஓகே செல்கிறார்.

இதையடுத்து மும்தாஜ் எதற்கு இவ்வளவு கடினமான டாஸ்கை செய்ய வேண்டும் என ரித்விகாவிடம் கூற, விஜலெட்சுமியை காப்பாற்றுவதை விட இதை நான் இதை எதிர்கொள்ள விரும்புகிறேன் என்று கூறுகிறார். உடனே கடுப்பாக அந்த இடத்தை விட்டு சென்றுவிடுகிறார் மும்தாஜ்.

இதையடுத்து விஜலெட்சுமி மற்ற போட்டியாளர்களிடம் பேசுகையில், ஒரு நாள் விஜயலெட்சுமிக்கும் மும்தாஜூக்கும் நன்றாக முட்ட போகிறது என சென்ராயன் கூறுகிறார். அப்படி என்ன நடந்தது விஜலெட்சுமி மற்றும் மும்தாஜ் இடையே என்பதை இன்றைய எபிசோட்டில் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!