அமெரிக்க ஓபன் டென்னிஸ் – கரோலினாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் செரீனா..!!


கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (வயது 36), செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர்.


துவக்கத்தில் சற்று பின்தங்கியிருந்த செரீனா, அதன்பின்னர் அபாரமாக விளையாடி 6-4, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்க ஓபனில் தொடர்ந்து 9 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் லத்வியா வீராங்கனை செவஸ்டோவாவை எதிர்கொள்கிறார். இவர் காலிறுதியில் நடப்பு சாம்பியனான ஸ்லோவன் ஸ்டீபன்சை வீழ்த்தியவர். எனவே, அரையிறுதி ஆட்டத்தில் செரீனா கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!