முகத்திலுள்ள பருக்கள் மற்றும் வடுக்களை அகற்ற இதோ எளிய முறைகள்…!


முகத்தில் முகப்பருக்கள் வந்து விட்டாலே அவை முக அழகைக் கெடுத்து விடும். அத்துடன் வடுக்களும் முகத்தில் தோன்ற ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சினைக்கு பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரும் முகங் கொடுத்து வருகின்றனர்.

எனினும், இந்தப் பிரச்சினைக்கு இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தீர்வு காணலாம். அவை என்ன? எப்படி தீர்வு காண்பது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

01. கற்றாளை
கற்றாளையை எடுத்து அதன் தோலைச் சீவி அதன் சாற்றை அப்படியே முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். அதனை குறைந்தது 30 நிமிடங்களுக்கு மேல் முகத்தில் வைத்திருக்க வேண்டும். பின்னர் முகத்தை குளிர் நீரால் கழுவ வேண்டும்.

02. தேங்காய் எண்ணெய்
கால் தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை எடுத்து, கைவிரல் நுனிகளைப் பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதன் போது முகம் வழுவழுப்பாக தோன்றும். சுமார் 30 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கிளென்சரை உபயோகித்து கழுவ வேண்டும்.

03. சுகர்ஸ்கிரப்
கரும்புச் சாறு மற்றும் ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து 2 க்கு 1 எனும் விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் எலுமிச்சம் சாறு சில துளிகளை இட வேண்டும். இந்தக் கலவையை வடுக்கள் மீது பூசி 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவி விட்டு மொய்ஸ்சரைசர் பூச வேண்டும். இதனை வாரத்திற்கு 2 – 3 தடவை செய்ய வேண்டும்.


04. ரோஸ்ஹிப்சீட் எண்ணெய்
இந்த எண்ணெயை முகத்தில் பூசி எண்ணெய் உறிஞ்சப்படும் வரை மசாஜ் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் இவ்வாறு செய்யலாம்.

05. பேக்கிங் சோடா
முறை – 1: 2 க்கு 2 எனும் விகிதத்தில் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் பூசி 1 – 2 நிமிடங்களுக்கு முகத்தில் வைத்திருக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய் அல்லது ரோஸ்ஹிப்சீட் எண்ணெய் ஆகியவற்றை உபயோகித்து மொய்ஸ்சரைசர் செய்ய வேண்டும்.

முறை – 2: ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் பூசி 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வருவது சிறந்தது.

06. தேன்
இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சம் சாறு ஆகியவற்றைக் கலந்து கொண்டு அதனை முகத்தில் பூச வேண்டும். பின்னர் 2 நிமிடங்கள் வைத்திருந்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்ய வேண்டும். – © Tamilvoice.com | All Rights
Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!