உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை குத்தி கொன்ற 18 வயது இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்..!


ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை சுப்புராயன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பரிமளா.

இவரது கணவர் கோவிந்தராஜ். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் கார்த்திக் மயிலாப்பூரில் உள்ள விடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வருகிறான். பரிமளா வீட்டு வேலை செய்து வந்தார்.

நேற்று நள்ளிரவு வீட்டில் பரிமளாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் பரிமளா பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு பரிமளா வீட்டு மாடியில் வசிக்கும் சூர்யா (18) நின்று கொண்டிருந்தார். அவர் பதட்டத்துடன் இருப்பதை கவனித்த போலீசார் சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரித்தனர். அதில் பரிமளாவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரை கைது செய்தனர். பரிமளாவுக்கும், சூர்யாவின் தாய் பாக்கியலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா பரிமளாவை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் மற்றொரு தகவலில் உல்லாசத்துக்கு மறுத்ததால் கொலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பரிமளாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதை அறிந்த சூர்யா, பரிமளாவிடம் தன்னுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார். ஆனால் அதற்கு பரிமளா மறுத்ததால் தகராறு செய்தார்.

இது தொடர்பாக நேற்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ஆத்திரத்தில் பரிமளாவை சூர்யா கொலை செய்ததாக தெரிகிறது.

இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!