கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டாரா..?


கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டியைச் சேர்ந்த 32 வயதான கருப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலத்தில் உள்பாவாடை, பிற்சோற்ஸ், வெஸ்ட், பிரா போன்ற ஆடைகள் மாத்திரமே காணப்படுகின்றன.

மேலாடைகள் எதுவுமே காணப்படவில்லை. அத்தோடு காதில் தோடும் காணப்பட்டுள்ளன.

சடலத்தின் சுற்றுப்புறச் சூழலில் சிவில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் இடுப்பு பட்டி, ஒரு கோர்வையில் நான்கு திறப்புக்கள், பியர் ரின், நீலம் மற்று மஞ்சள் நிறங்களில் செருப்புக்கள் இரண்டு சோடி, கால் சங்கிலி, சிவப்பு பேனை ஒன்று நீல பேனை ஒன்று போன்ற சான்றுப் பொருட்கள் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் யாரும் இன்று வருகை தரவில்லை என வினவிய பொழுது அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு உத்தியோகத்தர் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று அவரது உறவினர்களிடம் விசாரித்ததன் பின்னர் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சடலம் அவர் தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் குறித்த ஊடகவியலாளரினால் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!