குடும்பத்தின் கவுரத்தை குலைத்த கள்ளத்தொடர்பு ஜோடியை சுட்டுக் கொன்ற தந்தை…!


குடும்பத்தின் கவுரத்தை குலைப்பதாக பெற்ற மகளையே தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் இம்ரான் என்பவருடன் பவுசியா என்ற பெண் ரகசிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பவுசியாவின் தந்தை இக்பால் மிகுந்த ஆத்திரம் அடைந்தார். அதன்பிறகு பவுசியாவின் நடவடிக்கையில் மிகுந்த அதிருப்தி அடைந்த அவரும், பவுசியாவின் மாமா உட்பட சில உறவினர்களும் பவுசியா மற்றும் இம்ரானை தண்டிக்க திட்டமிட்டனர்.

அதையடுத்து, பவுசியாவை தீவிரமாக கண்காணித்த குடும்பத்தினர், இக்பாலை சந்திக்க பவுசியா சென்றபோது ரகசியாமாக பின்தொடர்ந்து இக்பால் வீட்டில் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அதுமட்டுமின்றி, துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இம்ரானும், பவுசியாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் தந்தை இக்பால், மாமா உள்ளிட்ட உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

குடும்ப கவுரவத்தை சீரழித்ததாக பெற்ற மகளையே தந்தை உட்பட உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆண்டுக்கு ஆயிரம் பெண்கள் கவுரவ கொலைகள் செய்யப்படுவதாகவும், பெரும்பாலும் சகோதரர் மற்றும் கணவனாலுமே இந்த கொலைகள் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!