முகேஷ் அம்பானியிடம் இருக்கும் பிரம்மாண்ட வாகனங்கள் பற்றி சில சுவார்ஸ்யமான தகவல்…!


இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்றாலும், உலகளவில் முன்னணி செல்வந்தராகவும் முகேஷ் அம்பானி உள்ளார். ஆடம்பர வாழ்க்கையின் உச்சமான முகேஷ் அம்பானி பயன்படுத்தி வரும் வாகனங்கள் பற்றிய சிறப்புகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.


அன்டிலா வீடு
27 அடுக்குகள், 570 அடி உயரம் என மும்பையின் கம்பாலா பகுதியில் உள்ள அம்பானியின் பிரம்மாண்ட அன்டிலா வீட்டை பற்றி உலகமே அறியும்.


அம்பானி மற்றும் அவரது வாரிசுகள் வாங்கி குவிக்கும் வாகனங்களை நிறுத்தி வைக்க பிரம்மாண்ட கராஜ் மற்றும் அதை சாலை வரை கொண்டு வர பிரத்யேக மின் ஏணிகள் ஆகியவை இந்த வீட்டில் உள்ளன.

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் மூன்று ஹெலிபேடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


ஃபால்கான் 900 இ.எக்ஸ்
அம்பானி பயன்படுத்தி வரும் ஃபால்கான் 900 இ.எக்ஸ் விமானத்தில் ஒரு சிறிய அலுவலகமே இயங்குகிறது. இதை அவரது பணியாளர்கள் ‘மிட்ஃபைலைட் ஆஃபிஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

வைஃபை உடன் கூடிய தொலைதொடர்பு சாதனங்கள், செயற்கைகோளால் இயங்கும் தொலைக்காட்சி, இசை அமைப்புகள் மற்றும் கேமிங்கிறான சாதனங்கள் போன்றவை இதில் அமைக்கப்பட்டுள்ளன.

8340 கிமீ தொலைவிற்குள்ளான இடங்களில் தனது அலுவலக ஆலோசனைகள் மற்றும் சந்தைப்புகளை இந்த ஃபால்கான் 900 இ.எக்ஸ் விமானத்திலே முடித்துவிடுவார் அம்பானி.


மேபக் 62
அம்பானியிடம் இருக்கும் ஆடம்பர மாடல் கார்களில் ஒன்று மேபக் 62. முழுக்க முழுக்க கஸ்டமைஸ் செய்யப்பட்ட மாடல் இது.

வீடியோ கான்ஃபிரஸிங் வசதி, புல்லட் ஃப்ரூப் உட்பட பல்வேறு தேவைகள் இதில் உள்ளன. இந்திய மதிப்பில் இந்த காருடைய விலை ரூ.65.10 லட்சமாகும்.


போயிங் பிஸ்னஸ் ஜெட் 2
2007ம் ஆண்டில் தனது இரண்டாவது ஜெட் ரக விமானத்தை வாங்கினார் அம்பானி. அதுதான் போயிங் பிஸ்னஸ் ஜெட் 2. 78 பயணிகள் செல்லும் அளவிற்கு பெரிய விமானமான இது, 1004 சதுர அடி பரபரப்பளவை கொண்டது.

லவுஞ்ச் மற்றும் தனிப்பட்ட அறைகள் என ஆடம்பர வசதிகளை பெற்றுள்ள இந்த விமானத்தை அமெரிக்க டாலர் மதிப்பில் 73 மில்லியனுக்கு முகேஷ் அம்பானி வாங்கினார்.


ஏர்பஸ் 319 கார்பிரேட் ஜெட்
25 பயணிகளை ஏற்றிச் சொல்லக்கூடிய திறன் பெற்ற ஏர்பஸ் 319 கார்பரேட் ஜெட் விமானத்தை ஒரு சில வருடங்களுக்கு முன்பு அம்பானி வாங்கினார்.

பெரியளவிலான பொழுதுபோக்கு அம்சங்களை பெற்ற இந்த விமானத்தில் தனி கேபின், ஆடம்பரமான மது விடுதி மற்றும் பிரம்மாண்டமான டைனிங் ஏரியா ஆகியவை உள்ளன.


மெர்சிடிஸ் எஸ்.எல்.500
அம்பானி பயன்படுத்தும் கார்களிலேயே அதிக செயல்திறன் கொண்ட மிரட்டும் மாடல் மெர்சிடிஸ் எஸ்.எல் 500 காரை குறிப்பிடலாம்.

6எல் டர்போசார்ஜிடு எஞ்சினை பெற்றுள்ள இந்த கார், அதிகப்பட்சமாக 621 பிஎச்பி பவரை வழங்கும். மேலும் இது 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

புல்லட் ஃப்ரூப், கல்-விங் கதவுகள், ஆடம்பர உள்கட்டமைப்பு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த காரில் கவனிக்கத்தக்க பல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.


ஆஸ்டன் மார்டின் ரேபிட்
அம்பானி பயன்படுத்தும் கார்களில் மிகவும் விலையுயர்ந்த மாடல், ஆஸ்டன் மார்டின் ரேபிட். துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 4.4 விநாடிகளில் இந்த கார் எட்டி விடும்.

5.9 வி12 எஞ்சின் உள்ள இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் டிரான்மிஷன் தேவைகளை கவனிக்கிறது. மேலும் இதனுடைய அதிகப்பட்ச வேகம் மணிக்கு 203 கி.மீ.


அம்பானி படகு
வான் வழி, சாலை வழிகளில் மட்டுமில்லாமல், நீர் வழியாகவும் தனக்கான வாகனங்களை பிரத்யேகமாக பயன்படுத்து வருகிறார் முகேஷ் அம்பானி. அதில் ஒன்று தான் அம்பானி படகு.

குதிரையின் கால்தடம் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த படகு அதிக செயல்திறன் மிக்கது. மேலும் எரிவாயு கொள்ளவில் இது 50 சதவீதம் வரை சேமிக்கும் திறன் பெற்றது.

சோலார் கிளாஸ் ரூஃப், 58 மீட்டர் நீளம், 38 மீட்டர் அகலம் கொண்ட இந்த படகில், பியானோ பார், லவுஞ்ச் மற்றும் பிரம்மாண்ட டைனிங் ஏரியா ஆகிய வசதிகள் உள்ளன.

விருந்தினர்களுக்கான அறை, ஓய்வறை, மசாஜ் அறை, பீயூட்டி பார்லர் போன்ற வசதிகளும் இந்த படகில் உள்ளன. இதனுடைய விலை சுமார் 100 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!