வீட்டில் பெண்களை அடைத்து வைத்து விபசாரம்… கணவன்-மனைவி அதிரடி கைது…!


ஈரோடு சூளையில் வாடகை வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு சூளை, அருள் வேந்தன் நகரில் ஒரு வாடகை வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் அந்த வீட்டை கண்காணிக்க வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார்.

இதையடுத்து டவுன் போலீஸ் டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணன், வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா தலைமையில் போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர்.

அப்போது இரவு நேரத்தில் அந்த வீட்டுக்கு சந்தேகப்படும்படியாக பலர் சென்று வருவதை போலீசார் அறிந்தனர். இதையடுத்து அந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.

அங்கு 4 பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது. அந்த 4 பெண்களும் ஈரோட்டை சேர்ந்தவர்கள். அவர்களை போலீசார் மீட்டனர். அவர்கள் 4 பேரும் கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை கணவன்- மனைவியான முருகன்- யசோதா ஆகியோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை என்ன ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தனர். வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனரா? என்று விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்த விபசார கும்பலுக்கு பின்னணியில் பெரிய நெட்வொர்க் ஏதும் இருக்குமா? என்றும் விசாரணை நடக்கிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!