கேரளாவில் நிலச்சரிவு – கடும் வெள்ளத்தால் இரண்டு நாளில் 73 பேர் மரணம்..!


கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று முதல் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ராணுவம், கடலோர காவல் படையினர், கடற்படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 52 குழுக்களாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு தினங்களில், பத்தனம்திட்டா, ஆலுவா, பாலக்காடு பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தொடர்ந்து இன்று காலை முதல் நிலச்சரிவு உள்ளதால் அங்கு மீட்பு பணிகள் நடைபெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு தினங்களில் மட்டும் பலியானோரின் எண்ணிக்கை 73 ஆக உள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!