கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மூத்த மகன் மு.க. முத்து..!!


திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 7.8.2018 அன்று உயிரிழந்தார். அவரது மறைவை ஏற்க முடியாத தமிழக மக்களும் தொண்டர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதையடுத்து, மெரினாவில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தின் அருகே திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது மறைவு அன்று நேரில் அவரை சந்தித்து அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்களும், பொதுமக்களும் அவரது நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகம் மு.க முத்து கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதியின் முதல் மனைவியின் மகன் மு.க முத்து என்பது குறிப்பிடத்தக்கது.source-maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!