தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 பேர் மாத்திரமே தீவிரமான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள்…!


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 பேர் மாத்திரம், தீவிரமான குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புபட்ட சந்தேக நபர்களாக உள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று உரையாற்றியிருந்தார். அவரது உரைக்குப் பதிலளித்த சிறிலங்காவின் பிரதி நீதி அமைச்சர் சாரதி துஸ்மந்த,

“பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 பேர் மாத்திரம், தீவிரமான குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புபட்ட சந்தேக நபர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தீவிரவாத செயல்களுடன் தொடர்புடைய மோசமான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள்.

மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா கொலை, சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி, கோத்தாபய ராஜபக்ச கொலை முயற்சி, வில்பத்து சரணாலயத்தில் 7 படையினர் கொலை, அனுராதபுர விமானப்படைத் தளத் தாக்குதல், போன்றவற்றில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதில் உள்ளடங்கியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!