வெறும் கால்களில் நடந்தே வந்த தொண்டர்கள் – மீண்டும் மெர்சலாகிய மெரினா…!


போக்குவரத்து துண்டிக்கப்பட்டும் நிற்காமல் வெறும் கால்களில் நடந்து மெரினாவை நோக்கி பிரம்மாண்ட மக்கள் கூட்டம் படை எடுக்கிறது.

கருணாநிதியின் உடலை மெரினாவில் புதைக்க சட்ட போராட்டத்திற்கு பிறகு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனால் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறத்தில் கருணாநிதி உடல் புதைக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக ஜெசிபி இயந்திரம் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து வருகின்றனர். படுவேகமாக பணிகள் தீவிரமடைந்துக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும், மெரினாவில் அதிக அளவில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கும் தொண்டர்கள், பொதுமக்கள் ராஜாஜிஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு நேராக மெரினாவுக்கு படையெடுக்கின்றனர்.

இந்நிலையில், ராஜாஜி அரங்கத்தில் கலைஞரை காணமுடியாமல் தவித்த மக்கள் கூட்டம் அவரது முகத்தை பார்த்துவிட முனைந்து மெரினாவிற்கு நேரடியாக படையெடுத்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடலென பெருகி வரும் தொண்டர்கள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. உணவு, டீ, வாட்டர்கேன் மட்டும் அப்பகுதியில் விற்கப்படுகிறது. பஸ்கள் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

இதனால் பயணிகள் பஸ் மற்றும் ஏனைய வாகனங்களை கைவிட்டு நடந்தே மெரினாவுக்கு செல்லும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். திராவிட தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு மேணி புல்லரிக்கும் வகையில் மீண்டும் மெர்சல் ஆகப்போகிறது மெரினா.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!