ஆம்புலன்ஸில் 94-வது வயது வரை செல்லாத கலைஞர் – வெளியாகிய ஆச்சர்ய தகவல்..!


திமுக தலைவர் கருணாநிதி தனது 94-வது வயது வரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றதில்லை என்ற ஆச்சர்ய தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த மாதம் 27-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமானதையடுத்து, கோபுலபுரம் இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுதான் கலைஞர் கருணாநிதி முதல் முறையாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றது. இதற்கு முன்பு வரை எந்த ஒரு பிரச்னைக்காகவும் அவர் ஆம்புலனஸ் வாகனத்தில் சென்றதில்லை.

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த கருணாநிதி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோபாலபுரம் கொண்டுவரப்பட்டது.

கடந்த 2009-ம் ஆண்டு முதுகு வலி பிரச்னையால் அவதிப்பட்ட போதும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு நள்ளிரவில் தனது சொந்த காரிலேயே கருணாநிதி சென்றார்.

வயதானால் உடல்நலக் குறைபாடு, தள்ளாமை, மருத்துவமனை, உடல் சித்ரவதைகள் எல்லோருக்கும் பொதுவானவை.

ஆனால், முதுபெரும் தலைவரான கருணாநிதி உடல்நலக் குறைபாடுகளையும், மருத்துவமனையையும் அணுகிய விதம் நிச்சயமாக பிரத்யேகமானது.

எப்போதுமே அவருடைய மனோதைரியம் அசாத்தியமானது. எவ்வளவு வலியையும் அவர் எப்படி எதிர்கொண்டார் என்ற கேள்விக்கு, அவருடைய கடந்த கால அனுபவங்களில் பதில் இருக்கிறது.–Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!