மெரினாவில் கலைஞருக்கு இடம் – தீர்ப்பைக் கேட்டு தேம்பி அழுத ஸ்டாலின்…!


அண்ணா சமாதி அருகே கலைஞரை நல்லடக்கம் செய்யலாம் என உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தேம்பி அழுதார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதி அருகே புதைக்க உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, திமுகவினர் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டனர்.

போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்து கழித்த கலைஞரின் இறுதிப் பயணம் முடியும் இடம் கூட போராட்டக்களமாகவே மாறிவிட்டது.

இந்த இறுதிப் போராட்டத்திலும் வெற்றியை தனதாக்கிய தலைவன், டாக்டர் கலைஞர் வாழ்க வாழ்கவே என தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களும் எழுப்பினர்.

நீதிமன்ற தீர்ப்பை கிடைத்ததைத் தொடர்ந்து திமுக செயல்தலைவர் கண்ணீர் விட்டு அழுதார். அவரை தேற்றிய திமுக நிர்வாகிகளும் அழுத நிகழ்வு காண்போரின் நெஞ்சங்களை உறைய வைத்தது.

இதையடுத்து, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறுகையில், இது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல் வெற்றியாகும் என தெரிவித்தார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!