கர்ப்பகால நீரிழிவிலிருந்து தப்பிக்க கர்ப்பிணிகள் இவற்றை உட்கொண்டாலே போதும்..!


மாறியுள்ள உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு எம்மவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக தற்போது பாலூட்டும் தாய்மார்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது எவ்வாறு என்பதே இப்போதுள்ள பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது எனலாம்.

எனினும் பாலூட்டும் தாய்மார்கள் பாலூட்டுவதை நிறுத்தாது தொடர்ந்து பாலூட்டி வந்தாலேயே நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளது.

பாலூட்டுவதை தொடர, தாய்மார்கள் அனைவரும் பாலை சுரக்க வைப்பதை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை உண்ண வேண்டும். அந்த உணவுகள் என்ன என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.


01. ஓட்ஸ்
ஓட்ஸில் உள்ள சத்துக்கள் மற்றும் பைபர் என்பன பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்வதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க உதவி புரிகின்றது.

02. பெருஞ்சீரகம்
தாய்மார்கள் உண்ணும் உணவுகளை நல்ல முறையில் ஜீரணிக்க உதவி புரிவதோடு பால் சுரப்பதையும் உடனடியாக அதிகரிக்கச் செய்யும்.

03. வெந்தயம்
பிரசவத்தின் பின்னர் தாய்மார்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தீர்ப்பதோடு பால் சுரப்பதையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது.

04. முருங்கை இலை
முருங்கை இலையில் உள்ள 92 வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் 46 வகையான அன்டிஒக்ஸிடன்ஸ் தாயின் உடம்பில் பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும்.

05. இஞ்சி
இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், தாய்பால் சுரப்பதை அதிகரிக்க வைக்கலாம்.

எனவே மேற்குறிப்பிட்டவற்றை உட்கொண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து நீரிழவிலிருந்து விடுதலை பெற்றிடுவோம். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!