புரட்டி எடுக்க போகிறார் சனி பகவான்.. தப்பிக்க உடனே இந்த கோயில்களுக்கு போங்க..!


சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.

இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கப் போகிறது. அதே நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினமான காலம் உருவாகிக்கொண்டுள்ளது. எனினும் அதற்குரிய கோயில்களில் பரிகாரம் செய்தால் சனியின் வீரியம் குறைய வாய்ப்புள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

மேஷம், கடகம், சிம்மம் உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கு நல்லகாலம் பிறந்துவிட்டது. அதே நேரத்தில் மற்ற ராசிக்காரர்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய கோயில்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.


திருநள்ளாறு
சனிபெயர்ச்சி என்றாலே காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை தரிசித்து வருகின்றனர். சனிபாகவனை தரிசித்து பரிகாரம் செய்த திருநாள்ளாறு மட்டுமல்ல இன்னும் சில ஆலயங்களுக்கும் சென்று வரலாம் என்கின்றனர் ஆன்மீக வல்லுநர்கள். அவரவர் ஊருக்கு அருகில் உள்ள சனீஸ்வரன் ஆலயங்களுக்கு சென்று வரலாம் அவை எங்கெங்கு உள்ளது தெரிந்து கொள்வோம். மேஷம் ராசிக்கு அஷ்டம சனி முடிந்து பாக்ய சனி துவங்குகிறது.சனி இதுவரை துன்பம் தந்ததால் இனி சில பாக்யங்களை அதிர்ஷ்டத்தை தருவார்.

எப்படி செல்லலாம்
கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருநள்ளாறு கோயிலை எளிதில் அடையலாம். இது காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து 7 மணி நேரத்தொலைவிலும், திருச்சியிலிருந்து 3.5 மணி நேரத் தொலைவிலும் அமைந்துள்ளது.


வட திருநள்ளாறு
அகஸ்தியர் பல வருடங்கள் பூஜித்த லிங்கம் இத்தலத்தில் உள்ளது. அந்த லிங்கம் சுயம்புவானது. அகஸ்தியருக்குத் திருமணக்காட்சியைச் சிவபெருமான் இத்திருத்தலத்தில் காண்பித்தார். சனி பகவான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டார். எனவே சனிபகவானை இத்தலத்தில் வழிபடச் சனிபகவானால் நமக்கு உண்டாகும் இன்னல்கள் தீரும். சனிபகவானுக்கு பரிகாரம் சனிபகவான் இங்கு ஒரு தீர்த்தம் அமைத்து இருந்தார். அது சனி தீர்த்தம் ஆகும். இங்கு அமர்ந்துள்ள சனி பகவான் மங்கள சனீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தை வடதிருநள்ளாறு என்றும் சொல்கிறார்கள். திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இத்தல சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களைச் செய்கின்றனர்.

வட திருநள்ளாறு எப்படி செல்லலாம்
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். சென்னையில் உள்ள நவக்கிரகக் கோவில்களுள் சனிபகவான் அம்சத்துக்குரிய கோவிலாக விளங்குகிறது. சென்னை எழும்பூரிலிருந்து 1 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். 52J, 52F முதலான பேருந்துகள் இந்த கோயிலுக்கு அருகாமையில் செல்லும்.

சென்னை மேற்கு மாம்பலம்
சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அருளாட்சி புரிந்து வருகிறார் வட திருநள்ளாறு சனி பகவான். சனீஸ்வர பகவான் சாந்தமூர்த்தியாக காக வாகனத்தில் அமர்ந்து நீலாம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்ப இத்தலத்தில் பஞ்சமுக அனுமார், யக்ஞ விநாயகர் போன்றோரும் அருள்கின்றனர். ரிஷபம் ராசியினருக்கு சனி யோகாதிபதி என்பதால் ரிசபம் ராசியினரை சனி பாதிப்பதில்லை. ஆனால் உங்களை சுற்றி இருப்போரை பாதிக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு அவர்களால் சங்கடம்,நெருங்கிய உறவுகளை இழத்தல்,உறவினர்களுக்கு அறுவை சிகிச்சை,பொருள் காணாமல் போதல்,தொழில் முடக்கம் அல்லது மந்தம் காணப்படும்.


மாம்பலம் எப்படி செல்லலாம்
தியாகராயநகரிலிருந்து மேற்கு திசையில் அமைந்துள்ளது மேற்கு மாம்பலம். நடந்து செல்லும் தூரமே இருந்தாலும், பேருந்தில் செல்வது எளிதானதாக இருக்கும்.

சென்னை – பூந்தமல்லி
சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி பகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனிபாதிப்புகளிலிருந்து, குறிப்பாக நோய் உபாதைகளிலிருந்து தப்பலாம் என்பார்கள். குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் உண்டாகும் என்பதால் அனுசரித்து செல்லவும். எட்டுக்கு 12ல் சனி மறைவதால் சிறுநீரகம்,கர்ப்பபை சார்ந்த பிரச்சினைகள் தருவார். சிலர் வெளியூர் ,வெளிநாடு செல்வர்.

பூந்தமல்லி எப்படி செல்லலாம்
கோயம்பேடு பேருந்துநிலையத்திலிருந்து மதுரவாயல் வழியாக பூந்தமல்லி வந்தடைந்தால், அங்கிருந்து நடந்துசெல்லும் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில்.


அருங்குளம்
இங்கு அருளும் அகத்தீசர், சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டவர். இவரை தரிசித்தால் சனிபாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என சனிபகவானே ஈசனிடம் வரம் பெற்றதாக ஐதீகம். கடக ராசிக்காரர்களுக்கு இது பொன்னான காலம். எதிரி ஒழிந்தான். கடன் தீர்ந்தது. தொழில் உயர்கிறது. அடிச்சது லக் என பிறர் பேசுமளவு ஒரு யோகம் வந்து சேரும் .பெண்களால் யோகம் வரும்.

அருங்குளம் எப்படி செல்லலாம்
திருவள்ளூர்-திருத்தணி வழித்தடத்தில் திருவள்ளூரிலிந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது அருங்குளம். அதே நேரத்தில் திருத்தணியிலிருந்து எளிதில் சென்றுவிடும் தொலைவில் உள்ளது. உங்கள் வசதியைப் பொறுத்து பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

ஏரிக்குப்பம் யந்திரசனி
திருவண்ணாமலை அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர், ஈஸ்வர பட்டம் பெற்றவர், என்பதன் அடிப்படையில் யந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து, கோயில் எழுப்பினார். பல்லாண்டுகளுக்குப்பின் கோயில் அழிந்து, சுவாமி சிலை மட்டும் திறந்தவெளியில் இருந்தது. பின், பக்தர்கள் இங்கு சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பினர்.


சிவலிங்க வடிவில் சனி
எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு யந்திர சனீஸ்வரர் என்றே பெயர் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சிலையின் உச்சியில் சிவனைப் போலவே சூரியன், சந்திரன் உள்ளனர். நடுவே காகம் இருக்கிறது. லிங்க பாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள ‘ஷட்கோண யந்திரம்’ உள்ளது. இச்சிலையில் நமசிவாய என்னும் சிவமந்திரம், பீஜாட்க்ஷர மந்திரம், லட்சுமிகடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

ஏரிக்குப்பம் எப்படி செல்லலாம்
திருவண்ணாமலையிலிருந்து 1 மணி நேரத்துக்கும் குறைவான பயணத் தொலைவில் அமைந்துள்ளது ஏரிக்குப்பம். தேநெஎ 38 வழியாக சென்றால் எளிதில் செல்லலாம்.ஆரணிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

திருவாதவூர்
திருமறைநாதர் மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயிலில் சனிபகவான், திருமறைநாதரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். சூரிய பகவானின் மைந்தனான சனிபகவானுக்கு மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் பாதம் முடமானது. சனிபகவான் தனது தந்தையான சூரிய பகவானிடம் முறையிட்டார். இருவரும் சேர்ந்து மாண்டவ்ய முனிவரிடம் சாபவிமோசனம் கேட்டனர். அப்போது, மாண்டவ்ய முனிவர், பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையம்பதிக்குத் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது திருவாதவூர்த்தலம். அங்குள்ள திருமறைநாதரை நியமப்படி வணங்கினால் உன் சாபம் சரியாகும் என்றார். அதன்படி, சூரியனும், சனியும் திருவாதவூர் தலத்திற்கு வந்து, நியமப்படி நீராடி, சிவனை வணங்கினர்.


தனி சந்நிதி
திருவாதவூரில் வழிபட்டவரை வருத்தாதே என்று கேட்டுக் கொண்டார். பின்பு, சனீஸ்வர பகவானின் வாதம் நிவர்த்தியாகி, சிவன் எதிரிலேயே அமர்ந்த திருக்கோலத்தில் தனி சந்நதியில் காட்சியளிக்கிறார். சனி பகவான் இங்கு தனி சந்நதியில் அருள்கிறார். இத்தலத்து ஈசனை வழிபட சனிபாதிப்பிலிருந்து தப்பலாம். இத்தலம் மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவாதவூர் எப்படி செல்லலாம்
மதுரையிலிருந்து வெறும் 45 நிமிடங்களில் செல்கிற தொலைவில் உள்ளது திருவாதவூர். இவ்வூர் சரித்திர புகழ்பெற்ற பகுதியாகும். மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்திலிருந்து , மேலூர் சாலை வழியாக சென்று, ஒத்தக்கடையிலிருந்து வலப்பக்கம் திருவாதவூர் சாலையை அடையவேண்டும். செல்லும் வழியில் சக்கரத்தாழ்வார் திருக்கோயிலும், பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலும் வரும். அங்கிருந்து தோராயமாக 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது திருவாதவூர் கோயில்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!