பகலில் மருத்துவர்.. இரவில் கொள்ளை கும்பல் தலைவன் – போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!


குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள பால்வா பகுதியைச்சேர்ந்தவர் ஹரீஸ் மனியா. மருத்துவரான இவர், கார் கொள்ளை கும்பல் ஒன்றுக்கு தலைவனாக செயல்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ” பகலில் மருத்துவராக இருக்கும் ஹரிஸ் மனியா, இரவில் தனது சகோதரர் அரவிந்த் உட்பட ஏனைய இருவருடன் இணைந்து காரை கொள்ளையடித்து வந்துள்ளார்.

குறிப்பாக அங்குள்ள அகமதாபாத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தபட்டு இருக்கும் கார்களை மருத்துவரான ஹரேஷ் மனியா திருடிக்கொண்டு பால்வா பகுதிக்கு கொண்டு சென்று விடுவாராம். அங்கிருந்து, இரண்டு நாட்களில் நெம்பர் பிளேட்டுகளை மாற்றிக்கொண்டு, ஹரேஷ் மனியாவின் சகோதரர் அரவிந்த், ராஜ்கோட்டிற்கு அதே காரை எடுத்துச்சென்று விடுவார். சிசிடிவி கேமிராக்கள் மற்றும் டோல்கேட்டுகளில் மாட்டாமல் இருப்பதற்காக ஊரக சாலைகள் வழியாகவே ராஜ்கோட்டிற்கு அரவிந்த் காரை எடுத்துச்செல்வதை வழக்கமாக இருந்து இருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு முதல் இதுபோன்று கார்களை கொள்ளையடித்து வந்துள்ளனர். ராஜ்கோட்டில், காரை பெறும் இருவர் கார்களில் சிறிது மாற்றம் செய்து மீண்டும் பழைய சந்தையில் விற்றுவிடுவர். கார்களை இவ்வாறு திருடி விற்பதன் மூலம் ஒரு காருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை சம்பாதித்து வந்துள்ளனர். ஜூலை 30 ஆம் தேதி பெட்ரோல் பல்க் ஒன்றில், திருடிய காருக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்த போது, அரவிந்தை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

அரவிந்திடம் நடத்திய விசாரணையில் மேற்கூறிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தம் 251 கார்கள் வரை இந்த கும்பல் திருடியிருக்கலாம் என்று தெரிவித்துள்ள போலீசார், விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவன் போல் செயல்பட்ட மருத்துவர் ஹரீஸ் மனியா தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்யும் பணியில் தீவிரமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!