இன்று ஆடிப்பெருக்கு… இத மட்டும் செய்ய மறக்காதீங்க…!

ஆடிப்பெருக்கன்று இவ்வாறு வழிப்பட்டால் வாழ்வில் மிக உயர்ந்த நிலை அடைய முடியும் என சாஸ்திரம் கூறுகிறது.அது எப்படி என்பதையும், எந்த மாதிரியான வழிப்பாட்டைநாளை செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஆடிப்பெருக்கான வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்றும், குறிப்பாக நவக்கிரகங்களுள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு சிறப்புகள் உண்டு என்பதையும் இங்கே பார்க்கலாம்.

நீரை வழிபடுவது

‘சூரிய பகவான்’ பாரம்பரியத்தைக் குறிப்பவர். எனவே சூரிய யபகவானை வழிப்படுத்தல் வேண்டும். பஞ்சபூதங்களுள் ஒன்றான நீரை வழிப்படுவது ஆக சிறந்தது.

சந்திர பகவான் – குளிர்ச்சி உடையவர். அதாவது நதிகளைக் குறிக்கக்கூடிய கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘புத பகவான்’ – கலைகளுக்கு அதிபதி. மேற்குறிப்பிட்ட இந்த மூன்று கிரகங்கள் மூலம், ஒரு விதமான புத்துணர்ச்சி ஏற்படும்.

ஆடிப்பெருக்கு என்பதால் நீர் ஆதாரமான காவிரியை வழிப்படுவது நல்லது.


பெருமாளுக்கு முன் வைக்க வேண்டிய சீர் வரிசைகள் ..!

தாலிப்பொட்டு,

தான் அணிந்து கொண்ட பட்டு

மாலை

சந்தனம், குங்குமம், தாம்பூலம், புஷ்பம், பழங்கள் இவை அனைத்தையும் பெருமாளுக்கு முன் வைத்து வணங்கி, பின்னர் காவிரியில் சேர்த்து விடுவது வழக்கம். இவ்வாறு செய்யும் போது ‘ரங்கா…ரங்கா’ என மக்கள் கொஷமிடுவார்கள்.

நாளைய தினத்தில் அதாவது ஆடி பெருக்கு என்பதால், இந்த நாளில் ஸ்ரீரங்கம் பெருமாளே தன் தங்கைக்கு சீர் கொடுக்கின்ற காரணத்தால், நாளைய தினம் உடன் பிறந்த சகோதாரிகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து சீர் கொடுப்பது வழக்கமாக உள்ளது.

இதே போன்று ஆடி பெருக்கு அன்று காவிரி சென்று தான் வழிபட வேண்டும் என்பதில்லை.வீட்டில் உள்ளவர்கள் அருகில் உள்ளகோவிலுக்கு சென்று வழிப்படுவது நல்லது.

ஆடி பெருக்கான நாளைய தினத்தில், இது போன்ற வழிப்பாடுகளை செய்து வந்தால், கண்டிப்பாக நம் வாழ்வில் கிடைக்க வேண்டிய அனைத்து ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.-Source: tamil.asianetnews


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!